--!> இஸ்லாமிய ருகியா முறைப்படி ஆன்மீகக் காயங்களை குணப்படுத்தும் தீவிர திட்டம் | الأكاديمية الدولية لعلوم الطب التكاملي
Slider

جديدنا:

  • تم افتتاح كلية العلوم الطبية في تخصصات الطب
    البديل والتكميلي وغيرها.. بجميع الدرجات العلمية (بكالوريوس – ماجستير –
    دكتوراه) وبنظام الدراسة عن بعد أو معادلة الخبرات – وبتصديق من التعليم العالي
    والخارجية والسفارات – للتفاصيل اضغط هنا
  • اعتماد الدورات من كليات عالمية وتوثيق من الخارجية والسفارات.
  • يمكننا تشخيص حالتك وعمل جلسات الرقية الشرعية عن بعد: اضغط هنا للمزيد…

இஸ்லாமிய ருகியா முறைப்படி ஆன்மீகக் காயங்களை குணப்படுத்தும் தீவிர திட்டம் | الأكاديمية الدولية لعلوم الطب التكاملي


மிக்க அருளாளனும், மிக்க இரக்கமுள்ளவனான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்

அன்புள்ள சகோதர சகோதரிகளே:

 இஸ்லாமிய ருகியா முறைப்படியான ஒரு தீவிர திட்டம், இதோ (தீவிர நோயாளிகளுக்கும், விரைவான குணம் அடைய வேண்டிய நிலையினருக்கும், இறைவன் நாடினால்).  இது மிகவும் பயனுள்ளதாகும், இறைவன் நாடினால், குறிப்பாக புனித ரம்ஜான்  மாதத்தில்:

இத்திட்டத்தை உண்டாக்கியவர்:  டாக்டர்  இமாத் அல்-நஹார்,  இஸ்லாமிக் ருகியா மருத்துவர் தீர்க்கதரிசன மருந்து  மற்றும் உயிரிசக்தி

குறிப்பு :  குணமடையும் மற்றும் வெளியேற்றும் (எதிர்மறை விஷயங்களான நோய்கள், பொறாமை, பேய் பீடித்தல் மற்றும் சூன்யம் ஆகியவைகளை வெளியேற்றல்)  நோக்கத்துடன் பின் வரும் குறிப்புகள் தினந்தோறும் கடைபிடிக்கப்படவேண்டும், மேலும் எரிக்கும் நோக்கத்தையும்  சேர்த்துக்கொள்ளலாம்.

1. காலையிலும் மாலையிலும் இரந்து துவா வேண்டுதல் (ஃபஜருக்குப் பிறகும் அஸருக்கு பிறகும் செறிவுடன்) மற்றும் படுக்கச் செல்லும் முன்பு துவா வேண்டுதல்.  முழு துவா வேண்டுதல்களை பதிவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

2.  மன்னிப்புக் கோருங்கள் (வருந்தி மனந்திருந்துதல் நிபந்தனைகளில் ஒன்று) அது, பின் வருமாறு ஓதப்படவேண்டும்.  எல்லாம் வல்ல அல்லாஹ், அவனைத்தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இலர், அவன் ஒருவனே நித்தியமானவன், நான் அவனிடமே வருந்தி மனந்திருந்துகின்றேன். (100 தடவை)

3.  சொல்லுங்கள் :  இறைவன் ஒருவனே, ஈடு இணையற்றவன், அனைத்து பொருட்களும் அவன் உரிமையே அனைத்துப் புகழும் அவனுக்கே உரித்தானதாகும்.  அவனே படைத்து மரணத்தையும் தீர்மானிக்கின்றான். அனைத்து விஷயங்களுக்கும் அவனே போதுமானவன். (ஃபஜருக்கும், மக்ரிபுக்கும் பிறகு 100 தடவை)

4.   சொல்லுங்கள் :  அல்லாஹ்வைத் தவிர   வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இலர்.  (100 தடவை)

5.   சொல்வதாவது : அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சக்தி (அதிகரம்) கிடையாது (100 தடவை) சொல்வது உடலின் உள்ளும் வெளியிலும் சூன்ய முடிச்சுகளை அவிழ்த்துவிடும்.

6.   நித்தியமாக இருக்கும் நற்சொற்களாவது :  அல்ஹம்துலில்லாஹ், (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) ஷுக்ருக அல்லாஹ், (நன்றியும் அல்லாஹ்வுக்கே) லா இலாஹா இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இலர்.  அல்லாஹு அக்பர் (அல்லாஹ் ஒருவனே பெரியவன்), அல்லஹ்வைத் தவிர வேறு எதற்கும் சக்தி (அதிகாரம்) கிடையாது. (100 தடவை).

7.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது சலாத் (100 தடவை)

8.   சொல்லுங்கள்  :  அல்லாஹ் ஒருவனே நமக்கு போதுமானவன், அவனே நமக்கு நல் உதவி செய்பவன். (100 தடவை)

9.   சொல்வதாவது :  “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” (100 தடவை)

10.  சொல்லுங்கள் :  நான் ,   எந்த பக்தியுள்ள அல்லது அடங்காதவர்களால் கடக்க முடியாத அல்லாஹ்வின் நேர்த்தியான வார்த்தைகளுடன்  அடைக்கலம் நாடுகின்றேன், அவன் படைத்த தீய சக்திகளிடமிருந்தும், ஆகாயத்திலிருந்து இறங்கும் அல்லது மேலெழும்பும்  எந்த தீய சக்தியிலிருந்தும்,  அல்லாஹ் பூமியில் படைத்த தீய சக்திகளிலிருந்தும் அதிலிருந்து வரும் தீங்குகளிலிருந்தும், இரவு பகல் திட்டமிடும் தீய சக்திகளிலிருந்தும், நல்லதைக் கொண்டுவருபவைத்தவிர கதவைத்தட்டும் ஒவ்வொரு தீய சக்தியிலிருந்தும், கருணைமிக்க இறைவனே நான் உன்னிடம் அடைக்கலம் நாடுகின்றேன்.

11.  தானம் :  ஒரு உறை அல்லது பெட்டியை செய்து வைத்து, ஒவ்வொரு நாள் காலையிலும் அதில் சிறிது தானத்தை (ஒரு ரியால் அல்லது சற்று அதிகம்) இட்டு, தினந்தோரும் அல்லது புனித ரம்ஜான் மாதக்கடைசியில், தானம் பெற தகுதியுள்ளோரிடம் சேர்ப்பித்து விடவேண்டும்.

12.  அல்-குர்ஸி ஆயத்தை (100 தடவை) குணமடையவும், வெளியேற்றவும், உடலிலிருந்து குறும்பு செய்யும் பிடிவாத சைத்தானை எரிக்கும் நோக்கத்துடன் ஓதி வரவேண்டும்.

13.  ஸூரா அல்-ஃபீல் (100 தடவை) எரிக்கும் நோக்கமிருந்தால், ஓத வேண்டும்

14.  ஸூரா அல்-ஃபலஃக் (100 தடவை) ஓதவேண்டும்

15.  ஸூரா  அல்–ஃபாதிஹா (100 தடவை) மற்றும் ஸூரா அல்-பஃகரா ஒரு தடவை ஓதவேண்டும்

16.  ஸூரா அல்-ஸாஃப்பாத்  (100 தடவை) எரிக்கும் நோக்கமிருந்தால் ஓதவேண்டும்.

17.  முழு முடிப்பு மற்றும் ருகியா நிறைவேற்ற அல்-குர்’ஆனிலிருந்து  இரண்டு அத்தியாயங்களை ஓதவேண்டும்.

18.   காலை சிற்றுண்டிக்கு ஏழு அஜ்வா பேரீச்சம் பழங்கள் தேவை (7 பழங்கள்)  ஆனால், நீரழிவு நோயாளிகள்  ஒரு டம்ப்ளர் நீருடன் மூன்று (3)  பழங்கள் கொள்ளலாம்.

19.  ஓதப்பட்ட தேன் :  இதமான நீரில் ஒரு கரண்டி தேனை இட்டு நன்றாக கலக்கி,, காலை சிற்றுண்டி நேரத்திலும், நோன்பு நோற்போர் ஸஹர் நேரத்திலும்  தேனீரைப்போல் குடிக்கவேண்டும்.

20.  பின் குறிப்பிட்ட கலவையால் குளிக்கவும் : (சிடர் + சாதாரண உப்பு), ஏழு (7) கரண்டி சிடருடன் ஏழு கரண்டி உப்பை மூன்று லிடர் நீருடன் (கூடுமானவரை ஜம்ஜம் நீருடன்)  கலந்து, அதை குறைந்தது 30 நிமிடங்கள் ஊற விடவேண்டும். பின்னர், உங்கள் உடல் மீது ஊற்றிக்கொண்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர், உங்கள் உடலை சுத்தப்படுத்திக்கொள்ளவும்.  இது நாளின் என்னேரமும், இடைவிடாமல் 21 நாட்கள் செய்யவேண்டும்.

21.  ஓதப்பட்ட எண்ணெய்யால் உடலை (5 முறை) தேய்க்கவும்.  ஒவ்வொரு தடவையும் தேய்க்கும் எண்ணெய்யின் விதத்தை மாற்றிக்கொள்ளவும்.  பரிந்துரைக்கப்பட்ட சில எண்ணெய்கள் (வழக்கமான ஆலிவ் எண்ணெய், நைஜெல்லா சாடிவா எண்ணெய் – பிரிமியம் இந்திய எண்ணெய் – ஷாதாப்  எண்ணெய் – ஃபெருல்லா  எண்ணெய், கரும் மஸ்க் உடன் ஆலிவ் எண்ணெய் … ஆகியவைகள்)

22.  உடலின் மீது ஆவியை உண்டாக்க, சிற்றுண்டிக்குப் பிறகு  ஒவ்வொரு நாளும்10 நிமிடங்கள் ஓதப்பட்ட நைஜில்லா சாடிவா எண்ணெய்யை  உள்ளாடையில்லாமல் மேலடை  மட்டும் உடுத்தி, உடலில் தடவி, ஆவியை உடல் முழுக்க பரவ விடவும்.

23.  சிற்றுண்டிக்கு முன்பு மற்றும் நோன்பு நோற்கும் ஸுஹுர் நேரத்தில் இரந்து வேண்டி துவா செய்யவும்.

24.   ஓதப்பட்ட ஜம்ஜம் நீரைத்தவிர வேறு நீரை அருந்த வேண்டாம்.

25.  வெளிப்படையான சூன்யத்தின் நிலையில் (புதைக்கப்பட்ட,கல்லறை, கடல், பரவலாக்கப்பட்டவை…) அதை முறியடிக்க அது இருக்கும் இடம் அல்லது விதம் தெரிந்திருப்பது அவசியம், ஏனெனில், அவை தாமே புதுப்பித்துக்கொள்ளும் தன்மையுடையவை, ஆனால், உள் சூன்யம் (உணவில், பானங்களில் அல்லது நுகர்ப்பினால்) ஆனவைகளை குணப்படுத்துவது சுலபம்.

26.  மிக முக்கியமானது:  எல்லாம் வல்ல அல்லாஹ்வை நினைத்த வண்ணம் இருக்கவேண்டும்.

27.  இஸ்லாமிய ருகியா டேப் களை (கேஸைப்பொருத்து குறைந்தது இரண்டு டேப்கள் நாள் தோறும்) கேட்கவேண்டும்.    டேப்களை நீங்கல் இந்த இணைப்பில் காணலாம்  .

நீங்கள் விரும்பினால், பின்வருபவற்றை சேர்த்துக்கொள்ளலாம் ( தினமும் )

–    இந்த துவாவை திரும்ப ஓதவும் (100 தடவை):  வானங்களையும் பூமியையும் படைத்த ஓஹ் இறைவா,  அனைத்தும் தெரிந்த, உலகில் காணப்படாதவற்றை அறிந்தவனே,  அனைத்தின் மீதும் உரிமைக்கொண்டவனே, உன்னைத்தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவர் இலர்.  நான் என் தீய பாவங்களிலிருந்தும், ஷைத்தானின் ஷிர்க்கிலிருந்தும் மற்றும் எனக்கு எதிராகவோ அல்லது மற்ற முஸ்லிம்களுக்கு எதிராகவோ கேடு விளைவிப்பதிலிருந்து உன்னிடம் தஞ்சம் தேடுகின்றேன்.

–     ஸூரா அல்-ஃபாதிஹா படுக்க செல்லும் முன்பு (11 தடவை) ஓதவேண்டும்.

–     15 நிமிடங்கள் நடக்க வேண்டும்

–    பேய் பீடித்த கேஸ்கள், அதனை முடக்கும் எண்ணத்துடன் முடியுமானவரை ஓதவேண்டும் (பிசாசுவின் திட்டம் எப்பொழுதும் பலவீனமானதுதான்), அத்துடன், ஷேக் ஃகாலித் அல்-ஹபஷி உடைய எரிக்கும் ருகியாவையும் டாக்டர் இமாத் அல்-நஹார்  உடைய தீயின் ருகியாவையும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

–  இந்த புரோகிராம் அதிக பட்சம் மூன்று மணி நேரத்திற்கானது, சக்திவாய்ந்த, டேப்களைக்கேட்கும் புரோகிராம் அற்று, மேலும், இறைவன் நாடினால்,  கேட்பவர் ஆரம்ப  நாட்களிலேயே முன்னேற்றத்தைக் காணலாம்.

–     முந்திய புரோகிராமுடன் மேற் சொன்ன  விஷயங்களில் இல்லாதவற்றை சிலர் சேர்த்துக்கொள்ள விரும்புவதுண்டு.  இது புரோகிராமுடன் எக்காரணத்தைக்கொண்டும் முரண்படுவதில்லை. ஏதாவது சேர்க்கவோ, மாற்றவோ நினைப்போருக்கு கதவு அகலமாக திறந்தே இருக்கிறது.

–     நீங்கள், ஏதாவது மறதியின் காரணமாகவோ அல்லது மற்றவற்றில் மும்முரமாக இருந்ததாலோ குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் எதையாவது விட்டு விட்டால்  தப்பு ஏதும் கிடையாது.  நீங்கள் மறதியினால், எதையாவது கடைபிடிக்கத்தவறினால், இச்சிகிச்சை புரோகிராமிலிருந்து தடுமாறி விட்டீர் என சொல்லாதீர். ஆனால், அதை அடுத்த நாள் செய்வதற்கு முனைப்புடன் இருந்து, இறைவன் நாடினால் மரணத்தில் விரும்பிய விளைவை பெற முனையவும்.

–     புதுப்பிக்கப்பட்ட சூன்யத்தில்,  சூனியக்காரர்களுக்கு எதிராக மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமான செயல்முறை மூலமும், இரந்து துவா வேண்டுதலாலும்  அல்லாஹ்வுடைய உதவியை நாடவும். இம்மாதிரியான மாய மந்திரத்தையும் சூன்யத்தையும் தடுக்க பல வழிகளுண்டு.  ஆனால், சூன்யத்தின் விதத்தை நீங்கள்  அறிந்திருக்கவேண்டும் (புதைக்கப்பட்ட – முடியின் தாக்கம் – உடையின் தாக்கம் – உண்டப்பட்டது … ஆகியவை).

–   பகட்டுக்கார காதல சூன்யத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி (மற்றும் பொதுவாக மற்ற பெண்களும்) இஸ்லாமிய ஹிஜாப் முறையை பேணிக்கவேண்டும் ஏனெனில், சஹாபியாத் (பெண் சஹாபாக்கள்) (அல்லாஹ் அவர்களுடன் மகிழட்டும்) அபாயா அணிந்து, தம் முகங்களை மறைத்து, தீய கண்பார்வையிலிருந்தும்,  ஜின் மற்றும் மனித பொறாமையிலிருந்தும் பாதுகத்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

–  வலுவூட்டப்பட்ட ருகியாவை தகர்க்கும்படியான பாவங்களை நீங்கள் தவிர்க்கவேண்டும், மிகவும் குறிப்பாக :  இன்னிசை, ஆபாச வலைத்தளங்களை காணவோ, ஷைத்தானை வணங்குவோர் மற்றும் சூன்யக்காரர்களின் வலைத்தளங்களை காணவோ அல்லது அவர் புத்தகங்களை படிக்கவோ கூடாது.  வலுவான ருகியாவின் அரணை தகர்த்து அதை பலவீனமாக்கும் செயல்களை குறிக்கும் பக்கங்களை பரிசீலிக்க இங்கே சொடுக்கவும்.

–  இப்புரோகிராம், இந்த திட்டமானது ஒரு காரணத்திற்காகத்தான்.  மீட்பதும், குணப்படுத்துவதும் எல்லாம் வல்ல அல்லாஹ்தான்.  நாம் அவனையே முழுமையாக நம்பவேண்டும்.  மேலும் அல்லாஹ்வை அதிக அளவில் நினைத்து, நமக்கு மீட்பும், குணமும் அருள  அல்லாஹ்விடம் வேண்டுதல் வேண்டும்.   ஹதீஸ் குதுசியில் கூறப்பட்டுள்ளதாவது : “என் அடிமை நினைப்பதைப்போலவே நான்”

آخر فعاليات الأكاديمية:

Open chat تواصل معنا
مرحبا.. كيف يمكننا خدمتك؟
Hi.. Can we help you?